

|
12/20/2008 |
Filed under:
Technology
|
முக்கியமான
விவரங்கள் அடங்கிய ஒரு text document corrupt ஆகிவிட்டால் அதை மீண்டும் recover செய்ய முடியுமா?முடியும். நாம் உபயோகப்படுத்தும் பெரும்பாலான கோப்புகளில் இருந்து MS-Word-ஆல் text-ஐ பிரித்தெடுக்க முடியும். உதாரணமாக Excel spreadsheet-ல் இருந்தோ, Word document-ல் இருந்தோ, அல்லது வேறு Office suite மூலம் எழுதப்பட்ட கோப்புகளிலோ இருக்கும் text-ஐ கூட ஒரு error popup-உடன் recover செய்ய முடியும்.இவ்வளவு ஏன் ஒரு .exe file-ல் இருக்கும் text-ஐ கூட recover செய்ய முடியும்.
சரி Word மூலம் எப்படி text-ஐ recover செய்வது என்று பார்ப்போமா?
1.Main menu-வில் File->Open செல்லவும்(நீங்கள் Word 2007 பயன்படுத்துபவராக இருப்பின் இடது மேல்மூலையில் Office என்னும் பட்டன்-ஐ கிளிக் செய்த பின் Open Menu-வை கிளிக் செய்ய வேண்டும்).
2.பிறகு Files of type என்று கொடுக்கப்பட்டிருக்கும் drop-down box-இல் "Recover Text from any file" செலக்ட் செய்யுங்கள்.
3.உங்களுக்கு தேவையான கோப்பை(.doc,.xls,.exe,.rtf,etc என எது வேண்டுமானாலும்) தேர்ந்தெடுத்து Open-ஐ கிளிக் செய்யவும்.
இதற்கு பின்னர் ஒரு error popup வரும். படம் கீழே.

அதை கண்டுகொள்ளாமல் Close button-ஐ கிளிக் செய்யுங்கள். அந்த கோப்பில் இருந்த text இனி உங்கள் முன்னால்!!
Subscribe to:
Post Comments (Atom)

© 2009 பட்டாம்பூச்சி
0 comments:
Post a Comment