நீங்கள் 5 வருடங்களில் சராசரியாக எத்தனை மின்னஞ்சல்கள் அனுப்புவீர்கள்? 12/24/2008

நீங்கள் 5 வருடங்களில் எத்தனை மின்னஞ்சல்கள் அனுப்புவீர்கள்?
இது என்ன மொக்கையான கேள்வி?சொந்தமா எழுதியது, ஊரான் inbox-ல் இருந்து எனக்கு வந்ததை forward தட்டுவது என எல்லாமே சேர்த்து ஒரு ம்ம்ம்ம்.....அதெல்லாம் கணக்கில் அடங்காததுப்பா என்பீர்கள் இல்லையா?(நாங்கெல்லாம் கணக்கில் சூரப்புலியாக்கும்...ஹிஹிஹி).

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த பில் கிளிண்டன், ஜனாதிபதியாக தன்னுடைய பதவிக்காலத்தில் அனுப்பியது எவ்வளவு தெரியுமா?ஆயிரம்?லட்சம்?அதுதான் இல்லை.

ஜனாதிபதியாக அவர் அனுப்பியது இரண்டே மின்னஞ்சல்கள்தான்.ஒன்று,ஜான் கிளென் என்பவருக்கு-ஜான் space shuttle விமானத்தில் இருக்கும்போது.இன்னொன்று தனக்கான மின்னஞ்சல் சரியாய் வேலை செய்கிறதா என்று பார்க்க அனுப்பிய சோதனை மின்னஞ்சல்.
1 comments:

  • குசும்பன்
     

    //ஜான் கிளென் என்பவருக்கு-ஜான் space shuttle விமானத்தில் இருக்கும்போது//

    அதுவும் டெஸ்ட் மெயிலா விமானத்தில் பறக்கும் பொழுது மெயில் போகிறதா என்று பார்க்க?

Post a Comment