சில கணவன்மார்களின் புலம்பல்கள்!!!-பாகம் 2 2/27/2009

இந்த பதிவின் முதல் பாகத்தை படிக்க இங்கே செல்லுங்கள்.

இனி புலம்பல்கள் தொடர்கிறது.


கேஸ்
ஸ்டடி 4:இத கேளுங்க.வார வாரம் கோரமங்களா போரம் கூட்டிட்டு போகணும். வேற வழியும் இல்லையா, சரின்னு போனா, போறப்போ எல்லாம் ஒரு ஹேன்ட்பேக் வாங்கறா.வீட்டு அலமாரி நிரம்பி கட்டிலுக்கு அடியில ஒரு பொட்டில போட்டு வைக்கற அளவுக்கு வந்துடுச்சேன்னு "டைம்பாஸுக்கு கடை ஏதாவது வைக்க போறியான்னு", கேட்டா ஜீன்ஸ் போட்ட பிகருங்க முன்னாடி கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம நம்ள திட்டறா.அந்த பிகருங்க முன்னாடி இமேஜ் டேமேஜ் ஆகாம இருக்கவே ஒவ்வொரு முறையும் பை வாங்கி குடுத்து குடுத்து அது மலையா குமிஞ்சு கெடக்கு.பாக்கறப்போ எல்லாம் வயிறு எரியுது.அதுவும் கொறஞ்சது ஒரு பை 500 ரூபாயாவது வந்துருது.


கேஸ் ஸ்டடி 5:சந்தோசப்படுங்க "குச்சி,க்ரிசொகோனோ" மாதிரி ப்ராண்டேடு ஐட்டம் வாங்கலியேன்னு. இல்லேன்னா இந்நேரம் குசேலன் ஆகி இருப்பீங்க.இங்க என்ன கதை தெரியுமா?போன வாரம் சனிக்கிழமை என்னோட அப்பா கூட போன வாரம் ஷாப்பிங் பண்ண பிளான் பண்ணி, அவரோட சட்டையை கொண்டு வந்து குடுக்கறப்போ அவரோட சட்டைபையில 500 ரூபாய் இருக்கறத கவனிச்சுட்டு உடனே உள்ளே போனா.ஏதோ மறந்துட்டாபோல இருக்குன்னு பாத்தா என்னோட சட்டையை கொண்டு வந்து என்கிட்டே குடுத்து போலாம் வான்னு கூப்டா.உள்ள போயிட்டு வந்ததும் என்ன ஆச்சுன்னு கேட்டா,உங்க சட்டையில 1000 ருபாய் இருக்குன்னு ஒரு போடு போட்டுட்டு, இவ கூப்டாளேன்னு ரெடி ஆகி உக்காந்துகிட்டு இருந்த எங்கப்பாவுக்கு கடுக்கா குடுத்துட்டா. இத என்னன்னு சொல்ல?

கேஸ் ஸ்டடி 6: கடைல அவங்க தேர்ந்து எடுத்து கைல வச்சிருக்கற புடவையோ இல்ல வேற ஏதாவது மாடர்ன் உடையோ நல்லா இருக்கான்னு கேக்கறப்போ ஒண்ணும் சொல்ல முடியாது. நல்லா இருக்குன்னு சொன்னா "ஹூம்,என்ன ரசனையோ இதை போய் நல்லா இருக்குன்னு சொல்றீங்க"-ன்னுவாங்க.வேணாம்மா உனக்கு இது நல்லா இல்லைன்னு உண்மைய சொன்னா,"எப்பவுமே எனக்கு புடிச்சது எதுவுமே உங்களுக்கு புடிக்காதே.இப்படி கொஞ்சம் கூட ரசனையே இல்லாத ஆளுகிட்ட வந்து மாட்டிகிட்டு அவஸ்தைபடணும்னு என்னோட தலைவிதி"-ன்னுவாங்க. அட கருமமேன்னு வாய மூடிகிட்டு இருந்தாலும்,"இப்படி மண்ணுல புடிச்ச புள்ளையார் மாதிரி ஒக்காந்து இருக்கத்தான் கூட வந்தீங்களா?சொந்தமா அபிப்ராயம்னு ஒண்ணு சொல்ல துப்பு இருக்கா உங்களுக்குன்னு" திட்டி தீப்பா.கெளம்பி கூட போகணும் ஆனா வாய தொறக்க கூட யோசிக்கணும்.இதுக்கு எதுக்கு நான் கூட வரணும்.கலயாணத்துக்கு முன்னாடி ஊரையே தெருதெருவா சுத்திபுட்டு,கல்யாணம் ஆனா மட்டும் என்னமோ வழி தெரியாத மாதிரி நாமளும் வரணும்னு எதுக்கு நினைக்கறாங்கன்னு தெரியல."இருக்கேன் ஆனா இல்லைன்னு" ஒரு ஜடம் மாதிரி நாமளும் எதுக்கு ஒக்காந்து இருக்கணும்.நிம்மதியா அதுக்கு வீட்டுல டிவி பாத்துட்டோ பிரண்ட்சுங்க வீட்டுக்கோ போயிட்டு வருவோம்ல.அது பொறுக்காது அவங்களுக்கு.


கேஸ் ஸ்டடி 7: ஆன்சைட் போனப்போ கூட்டிட்டு போயிருந்தேன்யா.ராத்திரி 11 மணிக்கு மேல கூட ஷாப்பிங் பண்றாங்க நம்ம வீட்டு அம்மணி.எதுக்கு எல்லா நாட்டிலயும் 10 மணிக்கு மேல ஷாப்பிங் பண்ணக்கூடாதுன்னு சட்டம் போடமாட்டேங்குறானுங்க அப்படின்னு மனசுக்குள்ளயே திட்டி தீர்த்தேன்ப்பா.

இதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த பேச்சுலர் நண்பர் :அப்துல் கலாம்,வாஜ்பாயி மாதிரி நானும் பிரம்மச்சாரியாக வாழறதுன்னு முடிவு பண்ணிட்டேன்டா.நாட்டுக்காவது ஏதாவது நல்லது செய்யலாம்.இத்தனையும் கேட்ட பிறகும் தெரிஞ்சே பள்ளத்துல விழணுமா?இத்தனை இம்சைகளை எவ்வளவு நாள்தான் தாங்கிறது?அதனால நான் முடிவு பண்ணிட்டேன்.இந்த மனைவிமார்களை எல்லாம் இந்த ஜென்மத்துல புரிஞ்சிக்கவோ திருத்தவோ முடியாது.அதனால என்னால முடிஞ்சத இந்த நாட்டுக்கு செஞ்சா ஆத்ம திருப்தியாவது கிடைக்கும்.

இப்ப எந்த கேஸ் ஸ்டடி உங்களுக்கு ஒத்து போகுதுன்னு பாருங்க.புது கேஸ் ஸ்டடி உங்ககிட்ட இருந்தா வெட்கப்படாம கூச்சப்படாம கவலை படாம கொஞ்சம் பின்னூட்டத்துல சொல்லுங்க.தனி மடலும் ஓகே :-).உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்....ஹிஹி.

அது சரி, நிஜமாவே இந்த அளவுக்கு உங்களை தங்கமணிங்க படுத்தறாங்களா என்ன?ஆண்கள் கொஞ்சம் அதிகப்படியாகவே மிகைப்படுத்துவதாக எனக்கு தோன்றுகிறது :).



 யாருக்கில்லை போராட்டம்?? கண்ணில் என்ன நீரோட்டம் ?? 2/26/2009

நண்பர் ஒருவர் மிகவும் மனக்கிலேசத்துடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு சென்றார்.அவருக்காக இந்த பதிவு.

வாழ்வில் நாம் எல்லோரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு நினைப்பதுண்டு:"எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி எல்லாம் நடக்குதோ?"

நெருங்கி பார்த்தோமானால் அவரவர் தன்னுடைய தனிப்பட்ட தினசரி போராட்டத்தோடு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருப்பது தெரியும்.எனவே மற்றவர்களோடு ஒப்புமைப்படுத்தி நான் மட்டுமே கஷ்டப்படுகிறேன் என்று எண்ண வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் பார்க்கும் சந்தோசமான நபர்கள் பிரச்சினைகள் இன்றி வாழ்க்கை நடத்தவில்லை.பிரச்சினைகளை சமாளித்து அல்லது வெற்றிகொண்டு வாழ்க்கை நடத்துகிறவர்களாய் இருக்கின்றார்கள்.எனவே நம்மாலும் முடியும் என்ற மன உறுதியோடு ஒவ்வொரு நாள் வாழ்வையும் எதிர்கொள்வோம்.

எதிர்பார்ப்பின்றி வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கொண்டாலே மனது தெளிவடைந்து விடும்.பின்னர் எந்த குழப்பமும் நம்மை அண்டாது.மனம் விட்டு உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பாரங்களை இறக்கி விடுங்கள்.மனது லேசாகும்.அல்லது கண்ணீர் விட்டு அழுது தீர்த்துவிட்டு அடுத்த வேலையை பாருங்கள்.அதை சுத்தமாய் மறந்ததோடு அல்லாமல் அதற்கான தீர்வையும் உங்களை அறியாமலேயே செயலாற்றி இருப்பீர்கள்.

ஏதோ ஒரு வகையில் நாம் எல்லோருமே ஆசீர்வதிக்கப்பட்டவராகவே இருக்கின்றோம்.பெரும்பாலும் அது நமது கண்களுக்கு புலப்படுவதே இல்லை.

நாம் எடுத்துக்கொள்வதுதான் வாழ்க்கை. எப்போதும் அது அப்படித்தான் இருந்தது, இனியும் அப்படித்தான் இருக்கும். எனவே நின்று புலம்புவதினால் அது மாறிவிடப்போவது இல்லை.வாழ்க்கை நமக்கு நேரமும் இடமும் மட்டும் தரும். நிரப்ப வேண்டியது நம் சாமர்த்தியம்.



"உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு".



 சில கணவன்மார்களின் புலம்பல்கள்!!!-பாகம் 1 2/25/2009

மதிய உணவை சில பழைய நண்பர்களுடன் சாப்பிடும்போது அவர்கள் தனது மனைவியரை பற்றி பின்வருமாறு புலம்பி/கிண்டலடித்து தள்ளினர்.இது உங்களுக்கும் ஒத்து போகுதான்னு பாருங்க.

முன்குறிப்பு:மேற்கூறிய நண்பர்கள் சமீபத்தில்தான் திருமணம் முடித்தனர்.அதிகபட்சம் ஒரு வருடமே ஆகிறது.

கேஸ் ஸ்டடி 1:கல்யாணம் ஆனதில் இருந்து நிம்மதியா கிரிக்கெட் மேட்ச் பாக்க முடியல.அவசரம் அவசரமா கிளம்பி வீட்டுக்குள்ள நொழஞ்சதும் டிவி ஆன் பண்ணி 20-20 ஹைலைட் மட்டுமாவது மிஸ் பண்ணாம பாக்கணும்னு ஒக்காந்து பாத்துக்கிட்டு இருக்கேன்.அரை மணி நேரம் கூட பொறுக்கல அவளுக்கு.சமையலறைல பாத்திரம் உருள்வது என்ன இருமி இருமி சிக்னல் குடுத்து எச்சரிக்கை மணி அடிக்கறதென்ன அட போப்பா இது பெரிய தொல்லை.மிஞ்சி போனா 15 நிமிஷம்தான் எனக்கு கெடு.இல்லேன்னா அவளே வந்து கேபிள் ஒயர புடுங்கி விட்டுடறா.


கேஸ் ஸ்டடி 2:அட போய்யா உன் நெலமை எவ்வளவோ பரவால்ல.என் பொண்டாட்டி இருக்காளே என்னோட முதுகுக்கு பின்னாடி இருக்கற சமையல்கட்டுக்கு என்னை சுத்தி இடமும் வலமுமா பிரதட்சணம் பண்ணிதான் உள்ளேயே போவா.அவ இருக்கான்னு காட்டற சிக்னலாம் அது.டிவி முன்னாடி வந்து அடிக்கடி மறைச்சு மறைச்சு நடந்து போனா கவனம் கலைஞ்சு அவ பின்னாடி சுத்துறதுக்கு இந்த பிளான் யா.கல்யாணம் கஷ்டம்யா சாமி.

கேஸ் ஸ்டடி 3:அட நீங்க வேற.....அப்படியே பாத்து முடிச்சாலும் அதுக்கு அப்பறம் நிம்மதியா இருக்கும்கறீங்க?ம்ம்ஹும்.பேசாம, நம்மகிட்ட ஸ்டிரைக் பண்ணுவாங்க.கட்டில்ல திரும்பி படுத்துக்குவா.மூஞ்சில கூட முழிக்க மாட்டாளாம்.இதுல கஷ்ட காலம் என்னன்ன நாமளோ படுத்த உடனே கொறட்டை உடற கேசு.அடுத்த நாளு அதுவும் பெரிய பிரச்சினையாய் வெடிக்கும்.கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாம எப்படி கொறட்டை விட்டு தூங்கினியே பாவி மனுசானு ஆரம்பிச்சு, உன்னை போய் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்களேன்னு ஊருல இருக்கிற அவ அப்பா,அம்மா + உலகத்துல இல்லாத தாத்தன்,முப்பாட்டனை எல்லாம் இழுத்து போட்டு துவம்சம் பண்ணி புடுவா.சரின்னு அடுத்த முறை பேசினோம்னு வச்சுகோங்க ஒரே தாளிப்புதான்.அட கருமமேன்னு வாய தொறக்காம தூக்கத்தையும் அடக்கி அரை கண்ணுல கஷ்டப்பட்டு முழிச்சு இருந்தா, "என்ன திமிரு உனக்கு,சரியான ஈகோ புடிச்சவன் நீ.அவளே வந்து பேசட்டும்னு எவ்வளவு நெஞ்சழுத்தம் உனக்கு", அப்படின்னு நம்ம ரத்த அழுத்தத்த கூட்டி ஊரையும் கூட்டுவா.


புலம்பல்கள்/கேஸ் ஸ்டடிஸ் நீண்டுகொண்டே போவதால் மீதி புலம்பல்கள் அடுத்த பதிவில்.....



 புகை பிடிப்போர் கவனத்திற்கு புகை பிடிக்காதோர் பார்வைக்கு.....!! 2/25/2009






சொல்ல ஏதுமில்லை....படங்களே தன்னிலை விளக்கம் தரக்கூடியன.....



 கஜினி படம் பற்றிய குழந்தைகள் கருத்து !!! 2/19/2009

இந்த முறை அபார்ட்மென்ட் மீட்டிங் ஞாயிறு மாலை இருந்ததால் நிறைய பேர் வந்திருந்தனர்.அட நீங்க வேற,இல்லேன்னா அதே 10 பேருதான் கூவிகின்னு இருப்போம்.அதனால இது குறிப்பிட்டு சொல்லப்படுகிறது.அத விடுங்க. வான்டூசும் சற்று தள்ளி ஆட்டம் போட்டுட்டு இருந்தனர்.மீட்டிங் முடிவில் கலைந்து போகும்பொழுது ஒருவர் தன் நண்பருடன் கஜினி பற்றி பேச ஆரம்பித்தார்.அவர்கள் என்னமோ துவங்கி விட்டு பேசிக்கொண்டே போய் விட்டார்கள்.நாங்கள் எல்லோரும் கீழேயே நின்று கொண்டு அதை பற்றிய பேச்சை தொடர்ந்தோம்.விளையாடிக்கொண்டு இருந்த வால்களில் சில அவ்வப்போது ஒட்டுக்கேட்டு விட்டு தங்கள் பங்குக்கு கருத்துகளை அள்ளி விட்டுக்கொண்டு இருந்தனர்.எங்கள் பேச்சை விட அவர்களது சுவாரசியம் நிரம்பியதாக இருக்கவே அவர்களிடம் பேச்சு கொடுத்த போது அப்படம் பற்றிய அவர்கள் பார்வை வித்தியாசமாக இருந்தது.

எல்லோரும் மூன்றில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் சிறுசுகள்.வடநாட்டவர் பலரும் அப்பார்ட்மென்ட்டில் தங்கி இருப்பதால் நான் இங்கே குறிப்பிடுவது இந்தி கஜினியை. ஓகே,ஓவர் டு வாண்டூஸ்.

கேள்வி 1:ஆமிர் கான் எப்படி அவ்வளவு வலிமையான உடம்பை டெவெலப் செய்தார் என்று நினைக்கிறாய்?
பதில்(7 வயசு நிரம்பியவர்):அவருக்குதான் ஞாபக மறதி நோய் இருக்குல்ல...அதான் நாம ஏற்கனவே எக்சர்சைஸ் பண்ணிடோம்னு தெரியாம மறுபடி மறுபடி பண்ணாரா அதான் இப்படி ஆய்ட்டார்.
(என்ன மாதிரி காம்ப்ளன்,ஹார்லிக்ஸ் குடிக்கிரார்னு சொல்வான்னு என்னை மாதிரியே நெனச்சீங்களா?அவ்வ்வ்வ்வ்)

கேள்வி 2:ஒரு நாளைக்கு நீ சஞ்சய் சிங்கானியாவைவில்லன் கதாபாத்திரம்) பார்த்தா என்ன சொல்வே?
பதில்(8 அயசு நிரம்பியவர்):ம்ம்ம்ம்....நீ தேடற கஜினி உயிரோடதான் இருக்கான்....அதுவும் என்கூடதான் படிக்கிறான்....பேர மட்டும் ஆகாஷ்னு மாத்தி வச்சுகிட்டான்னு சொல்வேன்.
(என்னா கொலைவெறியோ அந்த ஆகாஷ் மேல....இவன் வருங்கால அரசியல்வாதி ஆகக்கூடிய எல்லா தகுதியும் ஒரு ஒளி வட்டத்தோட எனக்கு தெரியுது....உங்களுக்கு?)

கேள்வி 3:படத்திலேயே நீ ரொம்ப பயந்த இடம் எது?
பதில் (8 வயது நிரம்பியவர்):இண்டெர்வல் அப்போ வெளியே வந்தோமே அந்த இடம்தான் ரொம்ப பயமா இருந்துச்சு...அங்கதான் நிறைய சஞ்சய் சிங்கானியாஸ் பாப்கார்ன் வித்துட்டு இருந்தாங்க.
(என்னா நக்கலு பாருங்க..ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல போங்க)

இது உச்சகட்டம்.
கேள்வி 4:சஞ்சயை கண்டுபிடிக்க ஏன் ஆமிருக்கு அவ்வளவு நாட்கள் ஆகிடுச்சு?
பதில் (10 வயது நிரம்பியவர்):அவருக்கு எல்லாம் மறந்து போயிடுச்சா,அதுல கூகிள் எப்படி யூஸ் பண்றதுன்னும் அவர் மறந்துட்டார்...அதனால மேனுவலா தேடறதுக்கு அவருக்கு அவ்ளோ நாள் ஆகிடுச்சு பாவம்.
(சொன்னா நம்புங்க இத ரொம்ப சீரியஸ்-ஆகத்தான் சொன்னான்.இவனுக்கு கூட கூகிளாண்டவரின் சக்தி தெரிஞ்சிருக்கு பாருங்க.)

இதை எல்லாம் கேட்ட பிறகு சரியா மெர்சல் ஆகிடுச்சுபா.இந்த வயசுல நம்மகிட்ட கேட்கப்பட்ட கேள்விக்கெல்லாம் நாம எந்த மாதிரி பதில் சொல்லிட்டு இருந்தோம்னு கொஞ்சம் கொசுவத்தி சுத்துங்க...பின்னூட்டத்துல முடிஞ்சா சொல்லுங்க.



 உங்கள் வாடிக்கையாளரை பற்றி தெரிந்து கொள்வது எவ்வளவு முக்கியம்? 2/19/2009

நாம் சந்தைப்படுத்தும் பொருட்களை உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்களை எவ்வளவு தூரம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சியை கவனியுங்கள்.

கோகோ-கோலாவில் இருந்து வணிக விசயமாக மத்திய கிழக்காசிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட விற்பனை பிரதிநிதி தனது குறிக்கோளை நிறைவேற்ற முடியாது ஏமாற்றத்துடன் நாடு திரும்புகிறார்.அவருக்கு கொடுக்கப்பட்ட விற்பனை இலக்கில் அவர் இப்படி ஒரு தோல்வியை கண்டது இல்லை.பெரும்பாலும் அவரது இலக்கை முடித்த வெற்றியாளராகவே அவர் அறியப்பட்டிருந்தார்.

அவரது சக பணியாளர்,ஏன் அவரால் அரபு நாடுகளில் சந்தைப்படுத்த முடியாமல் போனது என்று அக்கறையுடன் விசாரிக்கிறார்.

அதற்கு அவரின் பதிலை படியுங்கள்:"என்னை முதலில் அரபு நாட்டிற்க்கு அனுப்பியபோது நிச்சயம் இலக்கை சர்வ நிச்சயமாக எட்டி விடுவேன் என்ற பெரும் நம்பிக்கையுடன்தான் இருந்தேன்.ஏனெனில் அங்கு அப்போது வரை கோகோ-கோலாவைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.ஆனால் அரபு மொழி தெரியாத காரணத்தால் என்னால் அவர்களிடம் என்னுடைய கருத்துகளை விரும்பியபடி சென்றடைய செய்ய முடியவில்லை.இந்த பிரச்சினையை சமாளித்து நான் சொல்ல வருவதை அவர்களுக்கு புரிய வைக்க மூன்று சுவரொட்டிகளை தயாரித்தேன்.

முதலாவது:ஒரு மனிதன் தாகத்தால் பாலைவனத்தின் சுடுமணலில் மயங்கி கிடப்பதுபோல.
இரண்டாவது:அந்த மனிதன் நமது கோகோ-கோலாவை அருந்துவது போல.
மூன்றாவது:அந்த நபர் உற்சாகத்துடன் புது தெம்போடு ஓடுவதை போல.

பிறகு அந்த சுவரொட்டிகளை அனைத்து இடங்களிலும் ஒட்ட செய்தேன்.

நண்பர் குழப்பத்துடன் இடைமறிக்கிறார்:"இந்த ஐடியா வேலையை இலகுவாக்கி இருக்க வேண்டுமே?"

விற்பனை பிரதிநிதி:"ஆகி இருக்கும்.ஆனால் அரேபியர்கள் வலமிருந்து இடமாக படிப்பவர்கள் என்பதை நான் நினைவில் கொள்ள மறந்து விட்டிருந்தேன்."


இது எப்படி இருக்கு?



 வலைப்பூவில் குரல் இடுகை!! 2/18/2009

நல்ல சங்கதி உள்ளது ஆனால் பக்கம் பக்கமாக அதை தட்டச்சு செய்வதில் எரிச்சல் அடைபவரா நீங்கள்?உங்களுக்காகவே புதிய தொழில்நுட்பம் வந்துள்ளது.

வலைப்பூ இடுகை என்பது பிறருடன் கருத்து பரிமாற்றம் செய்ய பயன்படும் முக்கியமான சாதனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதில் நம் அனைவருக்கும் பரிச்சயமானது எழுத்து வடிவில் உள்ள வலைப்பூக்கள்.இதன் அடுத்த கட்டமாக வந்துள்ளது பேச்சு வடிவில் உள்ள குரல் வலைபூக்கள்(கவனிக்க:குரல்வளை இல்லை குரல் வலை :) வேறு ஏதாவது சரியான பதம் இருந்தால் தெரியப்படுத்துங்களேன்).

நாம் இடுகையாக இட வேண்டியதை பேசி இடுகை இடலாம்.இணையத்திலும் இது பேச்சு வடிவிலேயே சேமிக்கப்படுகிறது.

இந்த வகையிலான இடுகைகளை உடைய நமது வலைபக்கத்திற்கு வரும் பார்வையாளர்களிடம் voice-enabled கணினியும் speakers-ம் இருக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட ஒலி கோப்பை நமது வலைப்பூவில் வெளியிடலாம்.

இது வியாபார ரீதியாக எவ்வளவு பயனளிக்கும் என்பதை இப்போதைக்கு அளவிட முடியவில்லை என்று அம்டக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஸ்ரீரங் பாபட் தெரிவித்துள்ளார்.

Ibibo என்ற இணையதளம் தற்போது தனது சேவையில் இதை பயன்படுத்தி வருகிறது.இதற்கு மிகவும் வரவேற்ப்பு உள்ளதாக நிறுவனர் அஷிஷ் கஷ்யப் கூறியுள்ளார்.

இவ்வளவு நல்லதும் நமக்கு சும்மா தருவாய்ங்களா?

நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு அங்கு உங்களது இடுகையை பேச்சு வடிவில் பதிவு செய்து விட வேண்டும்.அங்கிருந்து உடனே உங்களது இடுகைக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு விடும்.இதில் என்ன பிரச்சினை என்கின்றீர்களா?அழைக்க வேண்டிய எண் புது தில்லியிலோ சிங்கப்பூரிலோ இருந்தால் அழைப்பிற்கு ஆகும் செலவு நமக்கே.

நம்மிடம் உள்ள சாதாரண ஒலி பதிப்பானில் பதிவு செய்து அதை இணையத்தில் ஏற்றுவது என்பது கையை கடிக்காத முறை.இதை விட என்ன வகையான மேம்பட்ட வசதிகளை இந்த குரல் இடுகை மூலம் Ibibo போன்ற தளங்கள் தருகின்றன என்பதை இந்த வசதியை பயன்படுத்தாத எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

குரல் வலைப்பூக்கள் வந்து விட்டன.அடுத்து வீடியோ வலைப்பூக்கள்-ன் காலமாக இருக்குமோ?



 மலை மீது ஒரு மிதிவண்டி பயணம் !! 2/18/2009

பார்க்கும் நமக்கே குலை நடுங்குகிறது. எப்படித்தான் ஒட்டுகிறார்களோ தெரியலப்பா. எவ்வளவு கடுமையாக மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியை மேற்கொண்டிருப்பார்கள் இல்லையா? எதை எதையோ வாழ்வில் கஷ்டம் என்று சொல்லிக்கொண்டு திரியும் நமக்கெல்லாம் இது சிந்திக்க வேண்டிய விஷயம்.
இந்த அறிமுகம் இல்லா சகோதரர்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.







 சோனி நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம்-Transparent தொலைக்காட்சி பெட்டி 2/13/2009

சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய வகை தொலைக்காட்சி பெட்டி(?). இதற்கான விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.எப்படியும் பெருமூச்சு விடும் விலையாகத்தான் இருக்கும்.அதனால் பார்க்க மட்டுமாவது செய்வோம்.








 நவீன நாடோடிகளுக்கு - இருப்பிட சான்று எளிதாக பெற !!!! 2/13/2009

பல ஊர்களுக்கு மாற்றலாகி வேலைக்கு செல்லும் நம்மில் பலருக்கு இருப்பிட சான்று நிலையானதாக இருக்காது.ஆனால் புதிய இடத்தில் சான்று பெறுவதும் எளிதாக இருக்காது.இதனால் அதற்காக பல முறை முட்டி மோத வேண்டியது இருக்கும்.அதை கொண்டா இதை கொண்டா என்று சான்றுகளின் பட்டியலை வைத்துக்கொண்டு அழிச்சாட்டியம் பண்ணுவதுடன் பல முறை அலையவும் விடுவர்.இதற்கெல்லாம் தற்போது ஒரு முடிவு வந்துவிடும்போல் தெரிகிறது.

நமது இந்திய அஞ்சல் அலுவலகம் இதற்கான தீர்வை முன்வைத்துள்ளது.

உங்கள் புகைப்படத்துடன் கூடிய இருப்பிட சான்றை இனி இந்திய அஞ்சலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.மத்திய அரசால் வழங்கப்படும் ஓட்டுனர் உரிமம்,வாக்காளர் அட்டை போன்ற மற்ற அடையாள சான்றுகளை போலவே இதுவும் அங்கீகரிக்கப்பட்டதாகும்.வங்கி கணக்கு துவங்கவோ தரைவழி தொலைபேசி இணைப்பு மற்றும் இணைய இணைப்பு பெறவோ இதை சான்றாக பயன்படுத்தலாம்.

இதற்கு ஆகும் மொத்த செலவு ரூபாய் 250(விண்ணப்பத்திற்கு ரூபாய் ௧0,பிராசசிங் கட்டணம் ரூபாய் 240).

மேலதிக தகவல்களுக்கு அருகிலுள்ள அஞ்சல் நிலையத்தை அணுகவும்.



 காதலர் தினத்துக்கான டிரஸ் கோடு!!! 2/12/2009

..
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..

..
.
.




 முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ்-ன் குசும்பு!!! 2/12/2009

முதல் படம்:சீன அதிபர் அமெரிக்கா சென்றபோது எடுக்கப்பட்டது

இரண்டாவது படம்:முன்னாள் அமெரிக்க அதிபர் சீனா சென்றபோது எடுக்கப்பட்டது
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
--
-





 மென்பொருள் வல்லுனர் கஜினி!!!!!! 2/12/2009




 ரூபாய் தாள்களும் சில வேடிக்கை மடிப்புகளும்!!!! 2/12/2009