சில கணவன்மார்களின் புலம்பல்கள்!!!-பாகம் 1 2/25/2009

மதிய உணவை சில பழைய நண்பர்களுடன் சாப்பிடும்போது அவர்கள் தனது மனைவியரை பற்றி பின்வருமாறு புலம்பி/கிண்டலடித்து தள்ளினர்.இது உங்களுக்கும் ஒத்து போகுதான்னு பாருங்க.

முன்குறிப்பு:மேற்கூறிய நண்பர்கள் சமீபத்தில்தான் திருமணம் முடித்தனர்.அதிகபட்சம் ஒரு வருடமே ஆகிறது.

கேஸ் ஸ்டடி 1:கல்யாணம் ஆனதில் இருந்து நிம்மதியா கிரிக்கெட் மேட்ச் பாக்க முடியல.அவசரம் அவசரமா கிளம்பி வீட்டுக்குள்ள நொழஞ்சதும் டிவி ஆன் பண்ணி 20-20 ஹைலைட் மட்டுமாவது மிஸ் பண்ணாம பாக்கணும்னு ஒக்காந்து பாத்துக்கிட்டு இருக்கேன்.அரை மணி நேரம் கூட பொறுக்கல அவளுக்கு.சமையலறைல பாத்திரம் உருள்வது என்ன இருமி இருமி சிக்னல் குடுத்து எச்சரிக்கை மணி அடிக்கறதென்ன அட போப்பா இது பெரிய தொல்லை.மிஞ்சி போனா 15 நிமிஷம்தான் எனக்கு கெடு.இல்லேன்னா அவளே வந்து கேபிள் ஒயர புடுங்கி விட்டுடறா.


கேஸ் ஸ்டடி 2:அட போய்யா உன் நெலமை எவ்வளவோ பரவால்ல.என் பொண்டாட்டி இருக்காளே என்னோட முதுகுக்கு பின்னாடி இருக்கற சமையல்கட்டுக்கு என்னை சுத்தி இடமும் வலமுமா பிரதட்சணம் பண்ணிதான் உள்ளேயே போவா.அவ இருக்கான்னு காட்டற சிக்னலாம் அது.டிவி முன்னாடி வந்து அடிக்கடி மறைச்சு மறைச்சு நடந்து போனா கவனம் கலைஞ்சு அவ பின்னாடி சுத்துறதுக்கு இந்த பிளான் யா.கல்யாணம் கஷ்டம்யா சாமி.

கேஸ் ஸ்டடி 3:அட நீங்க வேற.....அப்படியே பாத்து முடிச்சாலும் அதுக்கு அப்பறம் நிம்மதியா இருக்கும்கறீங்க?ம்ம்ஹும்.பேசாம, நம்மகிட்ட ஸ்டிரைக் பண்ணுவாங்க.கட்டில்ல திரும்பி படுத்துக்குவா.மூஞ்சில கூட முழிக்க மாட்டாளாம்.இதுல கஷ்ட காலம் என்னன்ன நாமளோ படுத்த உடனே கொறட்டை உடற கேசு.அடுத்த நாளு அதுவும் பெரிய பிரச்சினையாய் வெடிக்கும்.கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாம எப்படி கொறட்டை விட்டு தூங்கினியே பாவி மனுசானு ஆரம்பிச்சு, உன்னை போய் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்களேன்னு ஊருல இருக்கிற அவ அப்பா,அம்மா + உலகத்துல இல்லாத தாத்தன்,முப்பாட்டனை எல்லாம் இழுத்து போட்டு துவம்சம் பண்ணி புடுவா.சரின்னு அடுத்த முறை பேசினோம்னு வச்சுகோங்க ஒரே தாளிப்புதான்.அட கருமமேன்னு வாய தொறக்காம தூக்கத்தையும் அடக்கி அரை கண்ணுல கஷ்டப்பட்டு முழிச்சு இருந்தா, "என்ன திமிரு உனக்கு,சரியான ஈகோ புடிச்சவன் நீ.அவளே வந்து பேசட்டும்னு எவ்வளவு நெஞ்சழுத்தம் உனக்கு", அப்படின்னு நம்ம ரத்த அழுத்தத்த கூட்டி ஊரையும் கூட்டுவா.


புலம்பல்கள்/கேஸ் ஸ்டடிஸ் நீண்டுகொண்டே போவதால் மீதி புலம்பல்கள் அடுத்த பதிவில்.....



0 comments:

Post a Comment