யாருக்கில்லை போராட்டம்?? கண்ணில் என்ன நீரோட்டம் ?? 2/26/2009

நண்பர் ஒருவர் மிகவும் மனக்கிலேசத்துடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு சென்றார்.அவருக்காக இந்த பதிவு.

வாழ்வில் நாம் எல்லோரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு நினைப்பதுண்டு:"எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி எல்லாம் நடக்குதோ?"

நெருங்கி பார்த்தோமானால் அவரவர் தன்னுடைய தனிப்பட்ட தினசரி போராட்டத்தோடு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருப்பது தெரியும்.எனவே மற்றவர்களோடு ஒப்புமைப்படுத்தி நான் மட்டுமே கஷ்டப்படுகிறேன் என்று எண்ண வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் பார்க்கும் சந்தோசமான நபர்கள் பிரச்சினைகள் இன்றி வாழ்க்கை நடத்தவில்லை.பிரச்சினைகளை சமாளித்து அல்லது வெற்றிகொண்டு வாழ்க்கை நடத்துகிறவர்களாய் இருக்கின்றார்கள்.எனவே நம்மாலும் முடியும் என்ற மன உறுதியோடு ஒவ்வொரு நாள் வாழ்வையும் எதிர்கொள்வோம்.

எதிர்பார்ப்பின்றி வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கொண்டாலே மனது தெளிவடைந்து விடும்.பின்னர் எந்த குழப்பமும் நம்மை அண்டாது.மனம் விட்டு உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பாரங்களை இறக்கி விடுங்கள்.மனது லேசாகும்.அல்லது கண்ணீர் விட்டு அழுது தீர்த்துவிட்டு அடுத்த வேலையை பாருங்கள்.அதை சுத்தமாய் மறந்ததோடு அல்லாமல் அதற்கான தீர்வையும் உங்களை அறியாமலேயே செயலாற்றி இருப்பீர்கள்.

ஏதோ ஒரு வகையில் நாம் எல்லோருமே ஆசீர்வதிக்கப்பட்டவராகவே இருக்கின்றோம்.பெரும்பாலும் அது நமது கண்களுக்கு புலப்படுவதே இல்லை.

நாம் எடுத்துக்கொள்வதுதான் வாழ்க்கை. எப்போதும் அது அப்படித்தான் இருந்தது, இனியும் அப்படித்தான் இருக்கும். எனவே நின்று புலம்புவதினால் அது மாறிவிடப்போவது இல்லை.வாழ்க்கை நமக்கு நேரமும் இடமும் மட்டும் தரும். நிரப்ப வேண்டியது நம் சாமர்த்தியம்.



"உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு".



0 comments:

Post a Comment