உங்கள் வாடிக்கையாளரை பற்றி தெரிந்து கொள்வது எவ்வளவு முக்கியம்? 2/19/2009

நாம் சந்தைப்படுத்தும் பொருட்களை உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்களை எவ்வளவு தூரம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சியை கவனியுங்கள்.

கோகோ-கோலாவில் இருந்து வணிக விசயமாக மத்திய கிழக்காசிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட விற்பனை பிரதிநிதி தனது குறிக்கோளை நிறைவேற்ற முடியாது ஏமாற்றத்துடன் நாடு திரும்புகிறார்.அவருக்கு கொடுக்கப்பட்ட விற்பனை இலக்கில் அவர் இப்படி ஒரு தோல்வியை கண்டது இல்லை.பெரும்பாலும் அவரது இலக்கை முடித்த வெற்றியாளராகவே அவர் அறியப்பட்டிருந்தார்.

அவரது சக பணியாளர்,ஏன் அவரால் அரபு நாடுகளில் சந்தைப்படுத்த முடியாமல் போனது என்று அக்கறையுடன் விசாரிக்கிறார்.

அதற்கு அவரின் பதிலை படியுங்கள்:"என்னை முதலில் அரபு நாட்டிற்க்கு அனுப்பியபோது நிச்சயம் இலக்கை சர்வ நிச்சயமாக எட்டி விடுவேன் என்ற பெரும் நம்பிக்கையுடன்தான் இருந்தேன்.ஏனெனில் அங்கு அப்போது வரை கோகோ-கோலாவைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.ஆனால் அரபு மொழி தெரியாத காரணத்தால் என்னால் அவர்களிடம் என்னுடைய கருத்துகளை விரும்பியபடி சென்றடைய செய்ய முடியவில்லை.இந்த பிரச்சினையை சமாளித்து நான் சொல்ல வருவதை அவர்களுக்கு புரிய வைக்க மூன்று சுவரொட்டிகளை தயாரித்தேன்.

முதலாவது:ஒரு மனிதன் தாகத்தால் பாலைவனத்தின் சுடுமணலில் மயங்கி கிடப்பதுபோல.
இரண்டாவது:அந்த மனிதன் நமது கோகோ-கோலாவை அருந்துவது போல.
மூன்றாவது:அந்த நபர் உற்சாகத்துடன் புது தெம்போடு ஓடுவதை போல.

பிறகு அந்த சுவரொட்டிகளை அனைத்து இடங்களிலும் ஒட்ட செய்தேன்.

நண்பர் குழப்பத்துடன் இடைமறிக்கிறார்:"இந்த ஐடியா வேலையை இலகுவாக்கி இருக்க வேண்டுமே?"

விற்பனை பிரதிநிதி:"ஆகி இருக்கும்.ஆனால் அரேபியர்கள் வலமிருந்து இடமாக படிப்பவர்கள் என்பதை நான் நினைவில் கொள்ள மறந்து விட்டிருந்தேன்."


இது எப்படி இருக்கு?



0 comments:

Post a Comment