
FollowersSubscribeவலைப்பதிவு காப்பகம்என்னைப் பற்றிLive Traffic Feedவந்தார்கள் சென்றார்கள்.. |

|
10/22/2008 |
comments (0)
Filed under:
திருமணம்
|
"வீட்டை கட்டி பார்...கல்யாணம் பண்ணி பார்" என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள்???இதில் வீடு சம்பந்தமான அனுபவம் நேரடியாகவோ(நாமே கையை சுட்டுக்கொண்டும்), மறைமுகமாகவோ(நம் நண்பர்கள்,உறவினர்கள் படும் பாடும்) நம்மில் பலருக்கும் பரிச்சயமாகி இருக்கும். வீட்டுக்கடன் தவணை கட்டுவதற்குள் தாவு தீர்ந்து போவதை பற்றி பலரும் ஏற்கனவே புலம்பித் தள்ளிவிட்டதால் இரண்டாம் விசயத்தை எடுத்துக் கொள்வோம்.
திருமணம் நடத்துவதில் பொதுவாக இரண்டு வகையினர் உண்டு.படாடோபமாக நடத்துபவர்.எளிமையாக நடத்துபவர்.இரண்டாம் வகையிலும் இரண்டு வகை உண்டு(அட இருங்கப்பா...விஷயத்துக்கு வரேன்...).ஒன்று,தனிப்பட்ட கொள்கைக்காகவோ அல்லது "இது ஒரு நாள் கூத்து இதற்கு எதற்கு இவ்வளவு செலவு" என்றோ எளிமையாக நடத்துபவர்.இரண்டு,வேறு வழி இல்லாமல் தன்னுடைய பொருளாதார நிலைமையால் எளிமையாக நடத்துபவர்.
யாராக இருந்தாலும் திட்டமிடல் அவசியம்.பணக்காரர்கள் திருமண திட்டமீட்டாளரின்(அதாங்க wedding planner)சேவையை நாடுவர். நீங்கள் இவர்களில் ஒருவராக இருந்தால் இதோடு இந்த பதிவைப் படிப்பதை நிறுத்தவும்.உங்களுக்கு இது தேவைப்படாது.தன்னுடைய/சகோதரிகளின்/மகன் மகள்களின் கல்யாண செலவுக்காக கடன் வாங்கும் அல்லது காசு சேர்க்கும்(சேர்த்து கொண்டிருக்கும்) மிடில் கிளாஸ் மாதவனாக இருந்தால் இது உங்களுக்கான பதிவு.இருக்கும் கொஞ்ச காசையும் உருப்படியாக செலவு செய்ய சில டிப்ஸ்.தொடர்ந்து வரப் போகும் பதிவில் குறைந்த செலவில் திருமணம் எப்படி செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்(அட பாவி, கடைசியா அடுத்த பதிவுல சொல்றேன்னு சொல்றதுக்கு இவ்வளவு பில்ட்-அப் தேவையா என்றெல்லாம் கேக்கப்படாது ஆமா).
|
10/22/2008 |
Filed under:
பொது
|
புகை பிடிப்பதை தடை செய்து சமீபத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.இதனால் புகை பிடிப்பவர்கள் காண்டு ஆனாலும் பெரும்பாலான பொது மக்களின் ஆதரவை இந்த சட்டம் பெற்றது.இனிமேலாவது தங்கள் வீட்டு ரங்கமணிகள்(இப்போ எல்லாம் தங்கமணிகளும் இந்த கூட்டத்தில் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்) சிறிது சிறிதாக திருந்திவிடுவார்கள் என்று அமைச்சர் அன்புமணிக்கு நன்றி சொல்லிக் கொண்டு இருந்தனர்.
ஆனால் எதற்கும் அசராத அம்பிகள் சிலர் கூடி கும்மி அடித்து ரூம் போட்டு யோசித்ததால் விளைந்ததே இந்த எலக்ட்ரானிக் சிகரெட்.இதை United Kingdom-ல் உள்ள நிறுவனம் ஒன்று கண்டுபிடித்து உள்ளது.
புகை பிடித்தலில் உள்ள முக்கிய பிரச்சினை புகை பிடிப்பவர் மட்டும் அல்ல சுற்றி உள்ள மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே(passive smoking).புகை பிடிப்பவர் அதில் இருக்கும் 4000 க்கும் மேற்பட்ட வேதிகளால் பாதிக்கப்படுகிறார். அவர் ஊதி விடும் புகையால் சுற்றி இருப்பவரும் பாதிக்கப்படுகிறார்.இந்த நிலைமை மாற ஒரு நிறுவனம் சிந்தித்ததின் சீரிய விளைவே இந்த கண்டுபிடிப்பு.
(புகை பிடிப்பவர்கள் மீது என்ன அக்கறை பார்த்தீர்களா?)
இதன் பெருமைகளாக அவர்கள் கூறுவது:
- நுரையீரல் புற்று நோயை உருவாக்கும் கார்சினோசெனிக் பொருட்கள் இதில் இல்லை.
- நுரையீரல் தனில் தங்கிவிடக்கூடிய தார் எனப்படும் பொருள் இதில் இல்லை.வெளியே ஊதும்போது இதில் நீராவி மட்டுமே வெளிப்படுகிறது.எனவே சுற்றிலும் உள்ளவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை.
- வாய் துர்நாற்றம் மற்றும் பற்களில் கறை இருக்காது.
அது எப்படி இருக்கும் என்று இல்லாத மூளையை கசக்கி பிழிந்து மண்டையை உடைத்து யோசித்து கொண்டு இருப்பவர்களுக்காக அதன் மாதிரி படம் இதோ.அது இப்படித்தான் இருக்குமாம்.
இந்த வெண்குழல்வத்தி பேட்டரியில் இயங்க கூடியது.இதன் மேல் பாகத்தின் உள்ளே லித்தியம் rechargeable பேட்டரி உள்ளது.இதை உபயோகப்படுத்துவதால், சில நாடுகளில்,காசு மிச்சப்படுத்த முடியும் என்று இவர்கள் கூறுகிறார்கள்.ஆனால் ஆசிய நாடுகளில், எல்லாவிதமான அத்தியாவசிய பொருட்களை விட மிகவும் மலிவு விலையில் தற்போது கிடைப்பதை விட்டு இந்த புதிய கண்டுபிடிப்புக்கு மக்கள் மாறுவார்களா என்பது சந்தேகம்தான் என்கிறார் நண்பர் ஒருவர்.
இது ரீபில் செய்யக்கூடியது.ரீபில்-ல் நிகோடின் மற்றும் ப்ரோபிலின் க்லைகால் மட்டுமே இருக்குமாம்.புகையிலை இருக்காதாம்.ஒவ்வொரு முறையும் ரீபில் செய்து பேட்டரி சார்ஜ் செய்ய வேண்டும்.30-60 முறை ஊதி தள்ளலாமாம்.தற்போது சந்தையில் 39 பவுண்ட்-கு விற்க முடிவு செய்து இருக்கிறார்களாம்.
நவம்பர் மாதம் முதல் தேதி முதல் உலகெங்கும் விற்பனைக்கு வருகிறதாம். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் நம்மூர் ஆடி தள்ளுபடிக்கு துணி விற்பது போல் முதலில் முந்துபவர்களுக்கு 30% தள்ளுபடியும் உண்டாம்.
மேலே சொல்லப்பட்ட நண்பர் இந்த செய்தியால் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறார்.நண்பரைப்போல் இந்த பழக்கத்தை விட முடியாதவர்கள்,மிகவும் மகிழ்வார்கள்.ஆனால் நீங்கள் அடிமையாய் இருக்கும் பழக்கத்தை வைத்து நீங்கள் சம்பாதிக்கும் காசை எப்படி எல்லாம் பிடுங்கலாம் என்று யோசிக்கும் முதலாளி வர்க்கம், அவர்கள் பையை இதன் மூலம் நிரப்பிக்கொள்ள போகிறார்கள்.நண்பர்களே!!தயவு செய்து இந்த தீய பழக்கத்தை விட முயற்சி செய்யுங்கள்.இந்த மாதிரி கவர்ச்சிகரமாக ஏதாவது செய்து உங்கள் உழைப்பை (நண்பர் இது வரை இதற்காக செலவழித்த தொகை 2 லட்சத்தை தொடும் என்கிறார்...இது நாம் பெருமை பட கூடிய விசயமாக எனக்கு படவில்லை) மறைமுகமாக உறிஞ்சப்பார்ப்பவர்களை ஆதரிக்காதீர். பர்ஸ் பத்திரம்!!!அட போங்கப்பா அவ்வளவுதான் சொல்ல முடியும்.
|
10/19/2008 |
Filed under:
பொது
|
அந்த காரியம் தட்டிக் கொடுப்பதுதான். அன்பார்ந்த வலையுலக நண்பர்களே, கூட்டிலிருந்து இன்று வெளிவந்திருக்கும் இந்த பட்டாம்பூச்சியை தட்டிக்கொடுத்து (தேவைப்பட்டால் குட்டிகொடுத்தும் ) தங்களின் மேலான கருத்துகளையும் வழிகாட்டுதல்களையும் ஆதரவையும் அளிக்குமாறு கேட்டுகொள்கிறது இந்த பட்டாம்பூச்சி. வாழ்த்துகளை வரவேற்க காத்திருக்கிறது இந்த வண்ணத்துப்பூச்சி.

© 2009 பட்டாம்பூச்சி