கஜினி படம் பற்றிய குழந்தைகள் கருத்து !!! 2/19/2009

இந்த முறை அபார்ட்மென்ட் மீட்டிங் ஞாயிறு மாலை இருந்ததால் நிறைய பேர் வந்திருந்தனர்.அட நீங்க வேற,இல்லேன்னா அதே 10 பேருதான் கூவிகின்னு இருப்போம்.அதனால இது குறிப்பிட்டு சொல்லப்படுகிறது.அத விடுங்க. வான்டூசும் சற்று தள்ளி ஆட்டம் போட்டுட்டு இருந்தனர்.மீட்டிங் முடிவில் கலைந்து போகும்பொழுது ஒருவர் தன் நண்பருடன் கஜினி பற்றி பேச ஆரம்பித்தார்.அவர்கள் என்னமோ துவங்கி விட்டு பேசிக்கொண்டே போய் விட்டார்கள்.நாங்கள் எல்லோரும் கீழேயே நின்று கொண்டு அதை பற்றிய பேச்சை தொடர்ந்தோம்.விளையாடிக்கொண்டு இருந்த வால்களில் சில அவ்வப்போது ஒட்டுக்கேட்டு விட்டு தங்கள் பங்குக்கு கருத்துகளை அள்ளி விட்டுக்கொண்டு இருந்தனர்.எங்கள் பேச்சை விட அவர்களது சுவாரசியம் நிரம்பியதாக இருக்கவே அவர்களிடம் பேச்சு கொடுத்த போது அப்படம் பற்றிய அவர்கள் பார்வை வித்தியாசமாக இருந்தது.

எல்லோரும் மூன்றில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் சிறுசுகள்.வடநாட்டவர் பலரும் அப்பார்ட்மென்ட்டில் தங்கி இருப்பதால் நான் இங்கே குறிப்பிடுவது இந்தி கஜினியை. ஓகே,ஓவர் டு வாண்டூஸ்.

கேள்வி 1:ஆமிர் கான் எப்படி அவ்வளவு வலிமையான உடம்பை டெவெலப் செய்தார் என்று நினைக்கிறாய்?
பதில்(7 வயசு நிரம்பியவர்):அவருக்குதான் ஞாபக மறதி நோய் இருக்குல்ல...அதான் நாம ஏற்கனவே எக்சர்சைஸ் பண்ணிடோம்னு தெரியாம மறுபடி மறுபடி பண்ணாரா அதான் இப்படி ஆய்ட்டார்.
(என்ன மாதிரி காம்ப்ளன்,ஹார்லிக்ஸ் குடிக்கிரார்னு சொல்வான்னு என்னை மாதிரியே நெனச்சீங்களா?அவ்வ்வ்வ்வ்)

கேள்வி 2:ஒரு நாளைக்கு நீ சஞ்சய் சிங்கானியாவைவில்லன் கதாபாத்திரம்) பார்த்தா என்ன சொல்வே?
பதில்(8 அயசு நிரம்பியவர்):ம்ம்ம்ம்....நீ தேடற கஜினி உயிரோடதான் இருக்கான்....அதுவும் என்கூடதான் படிக்கிறான்....பேர மட்டும் ஆகாஷ்னு மாத்தி வச்சுகிட்டான்னு சொல்வேன்.
(என்னா கொலைவெறியோ அந்த ஆகாஷ் மேல....இவன் வருங்கால அரசியல்வாதி ஆகக்கூடிய எல்லா தகுதியும் ஒரு ஒளி வட்டத்தோட எனக்கு தெரியுது....உங்களுக்கு?)

கேள்வி 3:படத்திலேயே நீ ரொம்ப பயந்த இடம் எது?
பதில் (8 வயது நிரம்பியவர்):இண்டெர்வல் அப்போ வெளியே வந்தோமே அந்த இடம்தான் ரொம்ப பயமா இருந்துச்சு...அங்கதான் நிறைய சஞ்சய் சிங்கானியாஸ் பாப்கார்ன் வித்துட்டு இருந்தாங்க.
(என்னா நக்கலு பாருங்க..ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல போங்க)

இது உச்சகட்டம்.
கேள்வி 4:சஞ்சயை கண்டுபிடிக்க ஏன் ஆமிருக்கு அவ்வளவு நாட்கள் ஆகிடுச்சு?
பதில் (10 வயது நிரம்பியவர்):அவருக்கு எல்லாம் மறந்து போயிடுச்சா,அதுல கூகிள் எப்படி யூஸ் பண்றதுன்னும் அவர் மறந்துட்டார்...அதனால மேனுவலா தேடறதுக்கு அவருக்கு அவ்ளோ நாள் ஆகிடுச்சு பாவம்.
(சொன்னா நம்புங்க இத ரொம்ப சீரியஸ்-ஆகத்தான் சொன்னான்.இவனுக்கு கூட கூகிளாண்டவரின் சக்தி தெரிஞ்சிருக்கு பாருங்க.)

இதை எல்லாம் கேட்ட பிறகு சரியா மெர்சல் ஆகிடுச்சுபா.இந்த வயசுல நம்மகிட்ட கேட்கப்பட்ட கேள்விக்கெல்லாம் நாம எந்த மாதிரி பதில் சொல்லிட்டு இருந்தோம்னு கொஞ்சம் கொசுவத்தி சுத்துங்க...பின்னூட்டத்துல முடிஞ்சா சொல்லுங்க.



0 comments:

Post a Comment