சில கணவன்மார்களின் புலம்பல்கள்!!!-பாகம் 2 | 2/27/2009 |
|
இந்த பதிவின் முதல் பாகத்தை படிக்க இங்கே செல்லுங்கள்.
இனி புலம்பல்கள் தொடர்கிறது.
கேஸ் ஸ்டடி 4:இத கேளுங்க.வார வாரம் கோரமங்களா போரம் கூட்டிட்டு போகணும். வேற வழியும் இல்லையா, சரின்னு போனா, போறப்போ எல்லாம் ஒரு ஹேன்ட்பேக் வாங்கறா.வீட்டு அலமாரி நிரம்பி கட்டிலுக்கு அடியில ஒரு பொட்டில போட்டு வைக்கற அளவுக்கு வந்துடுச்சேன்னு "டைம்பாஸுக்கு கடை ஏதாவது வைக்க போறியான்னு", கேட்டா ஜீன்ஸ் போட்ட பிகருங்க முன்னாடி கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம நம்ள திட்டறா.அந்த பிகருங்க முன்னாடி இமேஜ் டேமேஜ் ஆகாம இருக்கவே ஒவ்வொரு முறையும் பை வாங்கி குடுத்து குடுத்து அது மலையா குமிஞ்சு கெடக்கு.பாக்கறப்போ எல்லாம் வயிறு எரியுது.அதுவும் கொறஞ்சது ஒரு பை 500 ரூபாயாவது வந்துருது.
கேஸ் ஸ்டடி 5:சந்தோசப்படுங்க "குச்சி,க்ரிசொகோனோ" மாதிரி ப்ராண்டேடு ஐட்டம் வாங்கலியேன்னு. இல்லேன்னா இந்நேரம் குசேலன் ஆகி இருப்பீங்க.இங்க என்ன கதை தெரியுமா?போன வாரம் சனிக்கிழமை என்னோட அப்பா கூட போன வாரம் ஷாப்பிங் பண்ண பிளான் பண்ணி, அவரோட சட்டையை கொண்டு வந்து குடுக்கறப்போ அவரோட சட்டைபையில 500 ரூபாய் இருக்கறத கவனிச்சுட்டு உடனே உள்ளே போனா.ஏதோ மறந்துட்டாபோல இருக்குன்னு பாத்தா என்னோட சட்டையை கொண்டு வந்து என்கிட்டே குடுத்து போலாம் வான்னு கூப்டா.உள்ள போயிட்டு வந்ததும் என்ன ஆச்சுன்னு கேட்டா,உங்க சட்டையில 1000 ருபாய் இருக்குன்னு ஒரு போடு போட்டுட்டு, இவ கூப்டாளேன்னு ரெடி ஆகி உக்காந்துகிட்டு இருந்த எங்கப்பாவுக்கு கடுக்கா குடுத்துட்டா. இத என்னன்னு சொல்ல?
கேஸ் ஸ்டடி 6: கடைல அவங்க தேர்ந்து எடுத்து கைல வச்சிருக்கற புடவையோ இல்ல வேற ஏதாவது மாடர்ன் உடையோ நல்லா இருக்கான்னு கேக்கறப்போ ஒண்ணும் சொல்ல முடியாது. நல்லா இருக்குன்னு சொன்னா "ஹூம்,என்ன ரசனையோ இதை போய் நல்லா இருக்குன்னு சொல்றீங்க"-ன்னுவாங்க.வேணாம்மா உனக்கு இது நல்லா இல்லைன்னு உண்மைய சொன்னா,"எப்பவுமே எனக்கு புடிச்சது எதுவுமே உங்களுக்கு புடிக்காதே.இப்படி கொஞ்சம் கூட ரசனையே இல்லாத ஆளுகிட்ட வந்து மாட்டிகிட்டு அவஸ்தைபடணும்னு என்னோட தலைவிதி"-ன்னுவாங்க. அட கருமமேன்னு வாய மூடிகிட்டு இருந்தாலும்,"இப்படி மண்ணுல புடிச்ச புள்ளையார் மாதிரி ஒக்காந்து இருக்கத்தான் கூட வந்தீங்களா?சொந்தமா அபிப்ராயம்னு ஒண்ணு சொல்ல துப்பு இருக்கா உங்களுக்குன்னு" திட்டி தீப்பா.கெளம்பி கூட போகணும் ஆனா வாய தொறக்க கூட யோசிக்கணும்.இதுக்கு எதுக்கு நான் கூட வரணும்.கலயாணத்துக்கு முன்னாடி ஊரையே தெருதெருவா சுத்திபுட்டு,கல்யாணம் ஆனா மட்டும் என்னமோ வழி தெரியாத மாதிரி நாமளும் வரணும்னு எதுக்கு நினைக்கறாங்கன்னு தெரியல."இருக்கேன் ஆனா இல்லைன்னு" ஒரு ஜடம் மாதிரி நாமளும் எதுக்கு ஒக்காந்து இருக்கணும்.நிம்மதியா அதுக்கு வீட்டுல டிவி பாத்துட்டோ பிரண்ட்சுங்க வீட்டுக்கோ போயிட்டு வருவோம்ல.அது பொறுக்காது அவங்களுக்கு.
கேஸ் ஸ்டடி 7: ஆன்சைட் போனப்போ கூட்டிட்டு போயிருந்தேன்யா.ராத்திரி 11 மணிக்கு மேல கூட ஷாப்பிங் பண்றாங்க நம்ம வீட்டு அம்மணி.எதுக்கு எல்லா நாட்டிலயும் 10 மணிக்கு மேல ஷாப்பிங் பண்ணக்கூடாதுன்னு சட்டம் போடமாட்டேங்குறானுங்க அப்படின்னு மனசுக்குள்ளயே திட்டி தீர்த்தேன்ப்பா.
இதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த பேச்சுலர் நண்பர் :அப்துல் கலாம்,வாஜ்பாயி மாதிரி நானும் பிரம்மச்சாரியாக வாழறதுன்னு முடிவு பண்ணிட்டேன்டா.நாட்டுக்காவது ஏதாவது நல்லது செய்யலாம்.இத்தனையும் கேட்ட பிறகும் தெரிஞ்சே பள்ளத்துல விழணுமா?இத்தனை இம்சைகளை எவ்வளவு நாள்தான் தாங்கிறது?அதனால நான் முடிவு பண்ணிட்டேன்.இந்த மனைவிமார்களை எல்லாம் இந்த ஜென்மத்துல புரிஞ்சிக்கவோ திருத்தவோ முடியாது.அதனால என்னால முடிஞ்சத இந்த நாட்டுக்கு செஞ்சா ஆத்ம திருப்தியாவது கிடைக்கும்.
இப்ப எந்த கேஸ் ஸ்டடி உங்களுக்கு ஒத்து போகுதுன்னு பாருங்க.புது கேஸ் ஸ்டடி உங்ககிட்ட இருந்தா வெட்கப்படாம கூச்சப்படாம கவலை படாம கொஞ்சம் பின்னூட்டத்துல சொல்லுங்க.தனி மடலும் ஓகே :-).உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்....ஹிஹி.
அது சரி, நிஜமாவே இந்த அளவுக்கு உங்களை தங்கமணிங்க படுத்தறாங்களா என்ன?ஆண்கள் கொஞ்சம் அதிகப்படியாகவே மிகைப்படுத்துவதாக எனக்கு தோன்றுகிறது :).
© 2009 பட்டாம்பூச்சி
அப்படியெல்லாம் இல்லையே, எவ்வளவு தங்கமான மனைவிகளும் இந்த நாட்டில இருக்காங்க?!? ;-)