FollowersSubscribeவலைப்பதிவு காப்பகம்என்னைப் பற்றிLive Traffic Feedவந்தார்கள் சென்றார்கள்.. |
எனது 32 பதில்கள்...!!!! | 6/22/2009 |
Filed under:
|
வணக்கம் நண்பர்களே....
நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறேன்.
வைரசின் கைவரிசையால் நமது வலைப்பூ முடக்கப்பட்டு விட்டது.அதிலிருந்து மீண்டு வரவே இவ்வளவு நாள் எடுத்தது.
இந்த தொடர் பதிவுக்கு அழைப்பு விடுத்த ஜோ அவர்களுக்கு நன்றி.
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
சொந்தப்பெயரை கேட்டால்,4 வருடத்திலிருந்து மிகவும் பிடிக்கும். அருமையான கணவர் கிடைக்க முகாந்திரமாய் இருந்ததால்.மேலும்,நண்பர்கள் எங்களையும் எங்கள் பேர் பொருத்தத்தையும் பார்த்து, "பேருக்கேத்த மாதிரி இருக்கீங்க போங்க" எனும்போது மிகவும் பிடிக்கும் :)
வலைபெயரை கேட்டால்,அது நானே வச்சுகிட்டது.எனவே பிடித்துதான் தேர்ந்தெடுத்திருப்பேன் இல்லையா? :)
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நண்பர் நர்சிம் அவர்களின் "தந்தை என்பவன்..." சிறுகதை படித்து முடித்தபோது.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
மிகவும் பிடிக்கும். பள்ளியிலும் கல்லூரியிலும் எனக்கு பெரு மதிப்பை பெற்று தந்துள்ளது. சென்ற முறை ஈரோட்டுக்கு ஜவுளி எடுக்க சென்றபோது,எனது 10-ம் வகுப்பு வரலாற்று ஆசிரியையை சந்திக்க நேர்ந்தது.எனது கணவரை அறிமுகப்படுத்தியதும் என்னவரிடம் அவர் சொன்னது: "கையெழுத்து அவ்வளவு அழகா இருக்கும்ங்க.மேப் எல்லாம் அருமையா போடுவாள்.பள்ளியிலேயே ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்த மாணவி இவள்."
(இனிமே ஏதாவது லொள்ளு பண்ணீங்க கட்டம் கட்டி மேப் போட்ற வேண்டியதுதான் :)))
4.பிடித்த மதிய உணவு என்ன?
காலை,மதியம்,இரவு என்று எப்போதுமே எனக்கு பிடித்த உணவு: பிரியாணி-அது சைவ பிரியாணியாக இருந்தாலுமே...ஹிஹிஹி. (அதுக்காக மூணு வேளையும் அதுதானான்னு கேக்காதிங்க :))
அப்புறம் இட்லி+கறிக்குழம்பு. இது இரண்டும் என்னுடைய அம்மாவின் கைபக்குவமாக இருக்கும் பட்சத்தில் மிகவும் பிடித்த உணவு வகைகளாகி விடும் :)
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
உடனே எல்லாம் வாய்ப்பே இல்லை.பெரும்பாலானவர்கள் கூறியது போல அலைவரிசை ஒத்து போனால் மட்டுமே பழகவே ஆரம்பிப்பேன். நட்பு என்னும் நிலைக்கு உயர சில காலம் பிடிக்கும்.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டுமே பிடிக்காது.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்களுடைய மேனரிசத்தை.பிறகு கண்களை.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது-கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முடிந்த அளவு அதில் முயற்சியுடன் ஈடுபடுவது.
பிடிக்காதது-பிற்பாடு புரிந்துகொள்வேன் என்றாலும் அந்த நிமிடம் முட்டாள்தனமாக பொத்துக்கொண்டு வரும் முன்கோபம்.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
பிடித்தது-இக்கட்டான கோபம் ஏற்படுத்தக்கூடிய சூழலிலும் நிதானம் இழக்காமல் இருப்பது,பிறரை காயப்படுத்தாத குணம்.
பிடிக்காதது-ரொம்ப்ப்ப்ப விட்டுக்கொடுப்பது.
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
இரண்டு பேரின் பெற்றோர்களும்.
(ஓவர் சீன போடறாங்கப்பு.இருக்கிற எடமே சொர்க்கம்னு சொல்லிக்கிட்டு இங்க இருக்கிற பெங்களூருக்கு வந்து சேந்தாப்போல ஒரு வாரம் தங்க மாட்டேங்கறாங்க.)
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
பழுப்பு நிறம்.
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
"கண்போன போக்கிலே கால் போகலாமா" என்ற நம் வாத்தியார் பாடல் :) எம்ஜியாரின் பரம ரசிகை நான்.
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு
ஆசை?
நீலம்.
14.பிடித்த மணம்?
மல்லிகை, சந்தனம்.
15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
யாரையும் அழைக்க போவதில்லை. கிட்டத்தட்ட நான் அழைக்க நினைத்த பதிவர்கள் எல்லோருமே ஏற்கனவே எழுதி முடித்து விட்டனர்.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
Learning Japanese என்ற இவரது தொடர் காணொளி பதிவுகள்.
(சீரியஸ் பாஸ்!!!)
17. பிடித்த விளையாட்டு?
குழந்தைகளுடன் விளையாடுவது. எப்போதுமே போரடி(ப்ப)த்ததில்லை.
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை.
19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
காமெடி படங்கள்-உள்ளத்தை அள்ளித்தா மாதிரி.
சென்சிபிலான படங்கள்-A Beautiful Mind மாதிரி.
ரொமான்டிக் படங்கள்-கடலோர கவிதைகள்,சேது,அலைபாயுதே,மைனே ப்யார் கியா மாதிரி.
பொதுவாகவே மனம் விட்டு சிரிக்க வைக்கும் எந்த மொழி படங்களும் பிடிக்கும்.
20.கடைசியாகப் பார்த்த padam?
கடைசியாகப் பார்த்த நல்ல படம் -பசங்க.
21.பிடித்த பருவ காலம் எது?
வெயில் படுத்தி எடுக்காத மிதமான இளம்குளிர்.
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
ஊருக்கு நல்லது சொல்வேன்-தமிழருவி மணியன்.
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அந்த பிரிவு என்னவரை சார்ந்தது :)
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்-தன்னை மறந்து சிரிக்கும் குழந்தையின் சிரிப்பு சத்தம்.
பிடிக்காத சத்தம்-குறட்டை.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
திருமணத்திற்கு முன்பு-பெங்களூரு.
திருமணத்திற்கு பின்பு-சென்னை.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்கிறது.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நன்றி மறப்பது.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
வைராக்கியம்(சில சமயம்)
கோபம்(பல சமயம்)
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
இயற்கை எழில் கொஞ்சும் எந்த இடமும்.
அது நியுசிலேந்து,சுவிட்சர்லேண்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
அடுத்த நாள் பற்றிய கவலை இல்லாமல் சந்தோசமாக வாழ.
இப்போது இருப்பதுபோல் வாழ்நாள் முழுதும் இருக்க.
31.மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
எதுவும் இல்லை. மறைத்து செய்ய ஒன்றும் இருந்ததில்லை.
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
வாழ்க்கை எப்போதுமே அப்படியேதான் இருக்கிறது.இருக்கும்.நீ இருந்தாலும் இல்லாவிட்டாலும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.
© 2009 பட்டாம்பூச்சி